பாஜக பாதயாத்திரை – கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை…!
பாஜக பாதயாத்திரையில் கலந்து கொள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ‘என் மண், என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 28-ஆம் தேதி தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார்.
இந்த 6 மாத கால நடைபயணத்தின் போது பாஜக தேசியத் தலைவர்கள் பலரும், அண்ணாமலையுடன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.