அலுவலகம் திறந்த பாஜக.! சீல் வைத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ..!
நாடுளுமன்ற தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே நாடளுமன்ற தேர்தல் அலுவலகம் திறந்து வரும் நிலையில் தேர்தலுக்கான வேலைகளிலும் முனைப்பாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பாக சென்னை, அமிஞ்சிக்கரையில் தலைமை அலுவலகமும், அதை தொடர்ந்து தென் சென்னை மற்றும் வடசென்னைகளில் தொகுதிவாரியான அலுவலகமும் திறக்கப்பட்டன.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் உதயநிதி
இந்நிலையில் நேற்று, பாஜக தென் சென்னை மாவட்டம் சார்பில் மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தென் சென்னை தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் வேலைகளுக்காக தேர்தல் அலுவலகம் திறக்கபட்டது.
இந்த அலுவலக திறப்பு விழாவில் பாஜக மாநில துணை தலைவர் கருநாகராஜன், அந்த தொகுதியின் பொறுப்பாளரான ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர். இந்நிலையில், இந்த குறிப்பிட்ட இடமானது கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால் இதை வணீக ரீதியான வேலைக்கு மட்டும் விடப்படும் என்று அறநிலை துறை அறிவித்து இருந்தது.
ஆனால், இதில் வணீக ரீதியான வேலை செய்ய அனுமதி வாங்கி அங்கே தேர்தல் அலுவலகம் திறந்ததால், இந்து சமய அற நிலைத்துறை அதிகாரிகள் தேர்தல் அலுவலகம் திறக்க அனுமதி கிடையாது என்று கூறி அலுவலகத்தை மூடி சீல் வைத்தனர்.
இந்து அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தில் எப்போதும் வணீக ரீதியான வேலைகளுக்கே அலுவலகம் ஒதுக்க பட்டிருக்கிறது. ஆனால் தற்போது போதிய அனுமதி வாங்காமல் அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால் அதிகாரிகள் கண்டித்து சீல் வைத்தனர்.