நாங்க வரல., முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்! புறக்கணித்த கட்சிகள்..,
தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பாஜக, நாம் தமிழர், தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனை பாஜக மறுத்தாலும், ஏற்கனவே உள்ள விதிமுறைபடி 2026இல் தொகுதி மறுவரையறை செய்யப்படலாம் என்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையாது என்றும் கூறி வருகின்றனர்.
அதாவது தற்போது இந்தியா முழுக்க மாநில அளவில் பார்த்தால் மக்கள் தொகை கட்டுப்பாடு வீதம் என்பது தென் மாநிலங்களில் தீவிரமாக பின்பற்றப்பட்டதான் காரணமாக இங்கு மக்கள் தொகை குறைவு. அதுவே வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகம். இதனால் மக்கள் தொகை படி தொகுதிகள் குறைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளில் 8 தொகுதிகள் குறைக்கப்பட்டு 31ஆக மாறக்கூடும் என திமுக கூறுகிறது. 848 என்ற எண்ணிக்கையில் தொகுதிகள் கூடினால் தமிழ்நாட்டிற்கு 22 தொகுதிகளுக்கு பதிலாக 10 தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தொகுதி எண்ணிக்கை மாறுபாட்டால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமை குறையும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை குறிப்பிட்டு தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க இன்று (மார்ச் 5) அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்க்கு தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 45 கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதில் பங்கேற்கும் கட்சிகள் குறித்த விவரம் ஏற்கனவே வெளியானது. திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் கலந்துகொள்ளவில்லை என்றும், நாம் தமிழர் கட்சியும் இதில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகள் :
- திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
- அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)
- இந்திய தேசிய காங்கிரஸ் (காங்கிரஸ்)
- பாரதிய ஜனதா கட்சி (பாஜக)
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI-M)
- விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக)
- பாட்டாளி மக்கள் கட்சி (பாமக)
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக)
- தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)
- மனிதநேய மக்கள் கட்சி
- தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக)
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக)
- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக)
- மக்கள் நீதி மய்யம் (மநீம)
- தமிழக வெற்றிக் கழகம் (தவெக)
- நாம் தமிழர் கட்சி (நாதக)
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
- அகில இந்திய பார்வர்டு பிளாக்
- ஆதி தமிழர் பேரவை
- முக்குலத்தோர் புலிப்படை
- மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
- மக்கள் விடுதலை கட்சி
- புதிய தமிழகம்
- புரட்சி பாரதம் கட்சி
- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
- புதிய நீதிக் கட்சி
- இந்திய ஜனநாயகக் கட்சி
- மனிதநேய ஜனநாயகக் கட்சி
- இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி
- இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
- பெருந்தலைவர் மக்கள் கட்சி
- அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
- பசும்பொன் தேசிய கழகம்
- அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்
- தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
- கலப்பை மக்கள் இயக்கம்
- பகுஜன் சமாஜ் கட்சி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை
- ஆம் ஆத்மி கட்சி
- சமதா கட்சி
- தமிழ்ப்புலிகள் கட்சி
- கொங்கு இளைஞர் பேரவை
- இந்திய குடியரசு கட்சி
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025