ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவித்த உடனே பாஜக போட்டியிடவில்லை என கூறிவிட்டோம் என அண்ணாமலை தகவல்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என தெரிவித்தார். இடைத்தேர்தல் அறிவித்த உடனே பாஜக போட்டியிடவில்லை என இரு தலைவர்களிடமும் கூறிவிட்டோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், அதிமுக உட்கட்சி பிரச்சனைக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இடைத்தேர்தலில் தனித்தனியாக நிற்காமல் சேர்ந்து நிற்க வேண்டும். வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளருடன் நாம் அணிவகுத்து நிற்க வேண்டும்.
எந்த கட்சியின் உட்கட்சி பிரச்சனையிலும் தலையிடமாட்டோம், பிரித்து குளிர்காய பாஜக விரும்பவில்லை. ஓ.பி.எஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் பரிந்துரை. சுயேட்சை வேட்பாளருக்கு பாஜக ஒருபோதும் ஆதரவு அளித்ததில்லை. பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்க கேட்டபோது சில நிபந்தனைகளை பன்னீர்செல்வம் வாய்த்த எனவும் அண்ணாமலை கூறினார்.
வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக பன்னீர்செல்வம் இன்னும் கூடுதல் அவகாசம் கேட்டார் என்றும் இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் பாஜகவின் விருப்பம். இதனால் இபிஎஸ் வேட்பாளரை, ஓபிஎஸ் ஆதரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…