பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, கிருஷ்ணகிரியில் உள்ள புதிய மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும் சமீபத்தில் தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவர் நிர்மல்குமார், கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார், இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
அண்ணாமலையும் அவருக்கு எங்கு சென்றாலும் பணி சிறக்க தனது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார், இதனையடுத்து பாஜக தகவல்தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணனும் கட்சியிலிருந்து விலகினார். இந்த பரபரப்பான நிலையில் ஜே பி நட்டா தமிழ்நாட்டிற்கு வருவது குறிப்பிடத்தக்கது.
கட்சியில் அடுத்தடுத்து 2 முக்கிய நிர்வாகிகள் விலகல் மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்தும், அதிமுக கூட்டணி குறித்தும் நட்டா, உயர்மட்ட நிர்வாக உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…