அதிமுகவுடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டிப்பு!

Default Image

அதிமுகவுடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டிப்பு.

அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்:

ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு அதிமுக – பாஜகவுக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலவி வருகிறது. பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்தனர். பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்மல் குமார், திலிப் கண்ணன் விலகி அதிமுகவில் இணைந்தனர்.

தொண்டர்கள் அதிர்ச்சி:

இவர்களை தொடர்ந்து, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் விலகுவதாக அறிவித்து, நிர்மல் குமார் வழியில் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதுபோன்று அடுத்தடுத்த விலகல் காரணமாக பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.

பாஜக – அதிமுக மோதல்:

இதனைத்தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அதிமுகவை விமர்சித்து, கண்டங்களை தெரிவித்தனர். மறுபக்கம் அதிமுகவும் பல்வேறு கண்டங்கள், விமர்சங்களை தெரிவித்தது. இதுபோன்று இரு கட்சியினர் மாறி, மாறி வார்த்தை மூலம் மோதிக்கொண்டனர்.

அதிமுக-பாஜக கூட்டணி:

பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததால் கோபம் அடைந்த பாஜகவினர் கடுமையான வார்த்தைகளை அள்ளி வீசினர். பாஜக தலைவருக்கு நாவடக்கம் தேவை, அவருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்று பதிலடி கொடுத்தது அதிமுக தரப்பு. அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களின் தொடர்பான கருத்துகளால் அதிமுக-பாஜக கூட்டணி முறியக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து, பாஜகவுடன் மோதல் இல்லை, கூட்டணி தொடரும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சமி, பாஜகவை யாரும் விமர்சிக்க வேண்டாம், அதனை நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

ஜே.பி.நட்டா கண்டிப்பு:

இந்த நிலையில், அதிமுகவுடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டிப்புடன் கூறியுள்ளார். அதிமுகவுடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள  வேண்டும். அதிமுக தலைமை குறித்தோ, தொண்டர்கள் குறித்தோ யாரும் எந்தவித குறையும் கூற கூடாது.

சமாதனப்போக்கு:

இதனை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்டாயம் பின்பற்றி நடக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சியை சேர்ந்த தலைவர்களும் தங்களது நிர்வாகிகளை சமாதனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்