இன்று தமிழ்நாடு வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!
இன்று காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரிக்கு வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
அதிமுக – பாஜக இடையே மோதல் நிலவி வரும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகிறார். கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோட்டில் இன்று (மார்ச் 10) மாவட்ட பாஜக அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இன்று காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரிக்கு வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கிருஷ்ணகிரி அலுவலகக் கட்டிடத்தையும், காணொலி மூலம் தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் திறந்து வைக்கிறார். மேலும், 75 அடி உயரக் கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்து, பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.