கனிமொழி பதவியேற்கும் போது பாஜக எம்.பி.க்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டதால் பரபரப்பு
நேற்று 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.நேற்று எம்.பி.கள் பதவி ஏற்ற நிலையில் இன்றும் எம்.பி.கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இந்த பதவியேற்பு விழாவில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்கள் தமிழிலே பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி தூத்தூக்குடி தொகுதியில் போட்டியிட்டார்.இவரை எதிர்த்து தூத்தூக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தராஜன் தோல்வியை தழுவினார்.
நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்றதன் மூலம் தூத்தூக்குடி தொகுதிக்கு எம்.பி.யாக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார்.இன்று டெல்லியில் எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி.யாக பதவியேற்றார்.
பதவி ஏற்கும் போது பேசிய கனிமொழி வாழ்க தமிழ் , வாழ்க பெரியார் என கூறினார்.அப்போது பதவி ஏற்பு விழாவில் இருந்த பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர் அதனால் பரபரப்பு ஏற்பட்டது.