வாக்கெடுப்பின் போது பாஜக எம்எல்ஏக்கள் வாக்களிப்போம் – நியமன எம்எல்ஏ சாமிநாதன்
புதுச்சேரியில் பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, நிச்சியம் வாக்களிக்க உள்ளதாக பாஜக நியமன எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளார்கள்.
புதுச்சேரியில் சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி 14 உறுப்பினர்களும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் 14 உறுப்பினர்களும் உள்ளதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் வலியுறுத்தி வந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்.22-ஆம் தேதி பெருபான்மையை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு உரிமை உள்ளதால் பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, நிச்சியம் வாக்களிக்க உள்ளதாக பாஜக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேசிய பாஜக நியமன எம்எல்ஏ சாமிநாதன், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எம்எல்ஏக்கு வாக்குரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதில் இடையில் சொல்வதற்கு நாராயணசாமி யாரு என்றும் நியமன எம்எல்ஏக்கள் நாங்கள் நிச்சியம் வாக்களிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.