2021-ம் ஆண்டு சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இருப்பார்கள்!” – எல்.முருகன்
அடுத்த ஆண்டு சட்டசபையில் பாஜக எம்எல்ஏ-க்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கூட்டத்திற்கு எதிராக,அனைவரும் தங்களது வீட்டில் வேல் பூஜை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.இதன்படி நேற்று தமிழக பாஜக தலைவர் முருகன் தனது வீட்டில் வேல் பூஜை நடத்தினார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் அரசு கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
கறுப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை விசாரிக்க வேண்டும். கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை.ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.பாஜகவிற்கு யார் வந்தாலும் வரவேற்போம்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக எம்எல்ஏக்கள் உறுதியாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.