தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறுவார்கள் – எல்.முருகன்
வரும் தேர்தலில் வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பின் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை ராஜினாமா செய்தார் .தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜகவின் தலைவராக இருந்தார் தமிழிசை.
பின்னர் தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் என்பவர் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் முருகன் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.இந்நிலையில் தமிழக பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வரும் தேர்தலில் வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறுவார்கள்.மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு செல்வோம். தமிழக நலன், தமிழர்கள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.