ஆளுநரை அவமதித்து.. திமுக நாடகத்தை அரங்கேற்றி உள்ளது.! பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம்.!
இன்று திமுக அரசு தங்கள் அரசின் திறமையின்மையை மறைக்க, ஊழலை மறைக்க, இந்த நாடகத்தை நிகழ்த்தியுள்ளது. – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்.
இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. தொடங்கும் போதே ஆளுநர் உரைக்கு திமுக கூட்டணி காட்சிகள் ஆளுனர் உரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இருந்தும் தனது உரையை தொடர்ந்து ஆற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே (சட்டப்பேரவை முடியும் முன்பே) பாதியில் ஆளுநர் ரவி தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று திமுக அரசு தாங்கள் அரசின் திறமையின்மையை மறைக்க, ஊழலை மறைக்க, மக்கள் வாரிசு அரசியல் பற்றி பேசாமல் இருக்க இந்த நாடகத்தை நிகழ்த்தியுள்ளது என கடுமையாக விமர்சித்தார்.
ஆளுங்கட்சி திமுக தங்களுக்கு எதுவும் தெரியாதது போல கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு இந்த நாடகத்தை நிறைவேற்றி உள்ளது. ஆளுநர் எதை குறிப்பிட வேண்டுமோ அதனை ஆளுநர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று திமுகவின் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நீங்கள் நினைப்பதை தான் ஆளுநர் பேசவேண்டும் என நினைக்கிறீர்களோ.? எனவும் தனது விமர்சனத்தை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.