தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை..!
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், துறைமுகம், தாராபுரம், உதகமண்டலம், நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
துறைமுகம் தொகுதி:
துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் வினோஜ் செல்வமும், திமுக சார்பில் சேகர்பாபு போட்டியிட்டனர். இதில் 3,242 வாக்குகளை வினோஜ் செல்வமும், 1,710 வாக்குகளை சேகர்பாபு பெற்றுள்ளார். இதனால் துறைமுகம் தொகுதியில் 1,532 வாக்குகள் வித்தியாசத்தில் வினோஜ் செல்வம் முன்னிலையில் உள்ளார்.
தாராபுரம் தொகுதி:
தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகனும் , திமுக சார்பில் கயல்விழி போட்டியிட்டனர். இதில் 15,186 வாக்குகளை எல்.முருகனும், 13,624 வாக்குகளை கயல்விழியும் பெற்றுள்ளார். இதனால் தாராபுரம் தொகுதியில் 1,562 வாக்குகள் வித்தியாசத்தில் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார்.
உதகமண்டலம் தொகுதி:
உதகமண்டலம் தொகுதியில் பாஜக சார்பில் எம்.போஜராஜனும் , காங்கிரஸ் சார்பில் கணேஷ் போட்டியிட்டனர். இதில் 22,406 வாக்குகளை எம்.போஜராஜனும், 16,198 வாக்குகளை கணேஷ் பெற்றுள்ளார். இதனால் தாராபுரம் தொகுதியில் 6,208 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.போஜராஜன் முன்னிலையில் உள்ளார்.
நாகர்கோவில் தொகுதி:
நாகர்கோவில் தொகுதியில் பாஜக சார்பில் எம்.ஆர்.காந்தி , திமுக சார்பில் என்.சுரேஷ்ராஜன் போட்டியிட்டனர். இதில் 13,831 வாக்குகளை எம்.ஆர்.காந்தியும், 11,483 வாக்குகளை என்.சுரேஷ்ராஜனும் பெற்றுள்ளார். இதனால் நாகர்கோவில் தொகுதியில் 2,348 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.ஆர்.காந்தி முன்னிலையில் உள்ளார்.
திருநெல்வேலி தொகுதி:
திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் , திமுக சார்பில் ஏ.எல்.எஸ். லட்சுமணன் போட்டியிட்டனர். இதில் 10,043 வாக்குகளை நயினார் நாகேந்திரனும், 6,015 வாக்குகளை ஏ.எல்.எஸ். லட்சுமணன் பெற்றுள்ளார். இதனால் திருநெல்வேலி தொகுதியில் 4,028 வாக்குகள் வித்தியாசத்தில் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார்.