தமிழ்நாடு

பாஜக தலைமை அவரை நீக்க வேண்டியிருக்கும் -அதிமுக செய்தித்தொடர்பாளர் பேட்டி

Published by
Venu

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என எல்.முருகன் கூறிய நிலையில்,அவரை நீக்க வேண்டியிருக்கும் -அதிமுக செய்தித்தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை  கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி  அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே நேற்று அரியலூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என பேட்டியளித்தார். ஏற்கனவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது பேச்சு அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், பாஜக தலைவர் எல். முருகன் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எல்.முருகன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், பாஜக தலைமை அவரை நீக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

26 minutes ago
இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 hours ago
பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago
பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

4 hours ago
குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

5 hours ago
என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

6 hours ago