பதவியேற்ற பின் முதல் முறையாக கோவை சென்ற தமிழக பாஜக தலைவர்.!

சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவிப்பு வெளியிட்டார். தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த முருகன், பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. பதவியேற்ற பின்னர் முதல் முறையாக கோவை வந்த எல். முருகனுக்கு, அக்கட்சியினர் கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், அங்கு பேசிய அவர், இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் தமிழக சட்டமன்றத்தில் அதிக பாஜக எம்.எல்.ஏக்களை உருவாக்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதையடுத்து சட்டமன்றத்திற்கு பாஜக எம்.எல்.ஏக்கள் அதிகமானோரை அனுப்பி வைக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டு வருகிறேன் என தெரிவித்தார்.