காதலியை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிய பாஜக பிரமுகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!
காதலியை கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணுடன் தலைமறைவாகியுள்ள பாஜக பிரமுகர் லால் சரண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வரக்கூடிய பாஜக பிரமுகர் லால் சரண் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், லால் சரண் அவரது காதலியான சட்டக் கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த பெண் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணுடன் லால் சரண் தலைமறைவாகிவிட்டார். இந்த செய்தி தெரிந்ததும் லால் சரணால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சட்டக்கல்லூரி மாணவி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பாஜக பிரமுகர் லால் சரண் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள லால் சரணையும் போலீசார் தேடி வருகின்றனர்.