புதுச்சேரியில் பயங்கரம்.! வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் படுகொலை.!

Default Image

புதுச்சேரியில் நேற்று இரவு பாஜக பிரமுகர் செந்தில் குமரன் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

புதுச்சேரி, மங்களம் பகுதி பாஜக பொறுப்பாளராக பதவியில் இருந்தவர் செந்தில் குமரன். இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்தததாகவும் கூறப்படுகிறது.

படுகொலை :

இவர்  நேற்று இரவு 9.30 மணியளவில் வில்லியனூரில் உள்ள அரசு பள்ளி அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும்போது, அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் செந்தில் குமரன் மீது வெடிகுண்டு வீசியுள்ளது. அதன் பிறகு கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு அவரை தாக்கியுள்ளது.

தனிப்படைகள் :

இந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே செந்தில் குமரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
Ministery Senthil Balaji
Newzeland MP Dance
Meta Fine
SA vs IND, 4th T20
Rain Update
Kanguva - Review