சட்டசபை தேர்தலுக்கு தற்போதே பிரச்சாரம் தொடங்கிவிட்டது.! கனிமொழி டீவீட்டிற்கு பாஜக தலைவர் பதில்.!
கனிமொழி பதிவிட்ட டீவீட்டிற்கு, பாஜக கட்சியின் (பொறுப்பு) பொதுச்செயலாளர் சந்தோஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், தேர்தல் நெருங்க எட்டு மாதங்கள் உள்ளன. தற்போது பிரச்சாரம் தொடங்கிவிட்டது. என்று பதிவிட்டிருந்தார்.
திமுக மகளிரணி தாலைவியும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி நேற்று பிற்பகல் டெல்லி செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது அங்குள்ள ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி கனிமொழியிடம் இந்தியில் ஆவணங்களை கேட்டுள்ளார். அதற்கு எம்பி கனிமொழி ஆங்கிலம் அல்லது தமிழில் பேசும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி நீங்கள் இந்தியரா என்று கேட்டதாக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
இதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக கட்சியின் ( பொறுப்பு )பொதுச்செயலாளர் சந்தோஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், தேர்தல் நெருங்க எட்டு மாதங்கள் உள்ளன. தற்போது பிரச்சாரம் தொடங்கிவிட்டது. என்று பதிவிட்டிருந்தார்.
Assembly elections are 8 months away … Campaign starts . https://t.co/7Be6JgYxVT
— B L Santhosh (@blsanthosh) August 9, 2020
அதாவது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது. ஆதலால் தற்போது அதனை குறிப்பிட்டு பாஜக தலைவர் இவ்வாறு கருத்தை பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரத்தில் எந்த மொழிக்கும் தனிப்பட்ட மொழிக்கும் முன்னுரிமை கிடையாது. இது குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம் என பதிவிட்டுள்ளனர். இந்த உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து கனிமொழி தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Thank you for the immediate response and assurance to take action. https://t.co/DaYdeBZhFD
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 9, 2020