வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பாஜக தலைவர் முருகன் பேசியுள்ளார்- அழகிரி
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பாஜக தலைவர் முருகன் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் என பேசியுள்ளார் என்று அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பதிவில்,சென்னை காமராஜர் அரங்கம் அருகே உள்ள மைதானம் காமராஜரால் உருவானது. இந்த அறக்கட்டளை இடத்தை மும்பையை சேர்ந்த சில கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும். தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து விவகாரத்தில் உண்மையை தமிழக காங்கிரஸ் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிவிட்டுள்ள பதிவில், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பாஜக தலைவர் முருகன் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் என பேசியுள்ளார். பெருந்தலைவரின் வழியில் இதய சுத்தியோடு,ஏழைகளுக்காக,நேர்மையாக பணியாற்றுகிறது அறக்கட்டளை என்று தெரிவித்துள்ளார்.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பாஜக தலைவர் திரு முருகன் @INCTamilNadu தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் என பேசியுள்ளார்.
பெருந்தலைவரின் வழியில் இதய சுத்தியோடு,ஏழைகளுக்காக,நேர்மையாக பணியாற்றுகிறது அறக்கட்டளை.
— KS_Alagiri (@KS_Alagiri) July 18, 2020