பெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்..!

Published by
murugan

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இச்சம்பவதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர்எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் ஈவெ.ரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்து  சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

காவி புனிதமானது. அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி. அதை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல. ஆனால் அதே நேரத்தில் தி.மு.க வின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், ஈவெராவின் பிறந்த நாளன்று நான் கூறியதை மேற்கோள் காட்டி, இது தான் அவருக்கு நீங்கள் காட்டும் மரியாதையா என்று கேட்டிருப்பது அரசியல் உள்நோக்கதோடு வீசியிருக்கிற கேள்வி.

காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே , இதற்கு உள்நோக்கம் கற்பித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுகவின் வன்மமான அரசியல் உள்நோக்கம் கண்டிக்கத்தக்கது. மேலும் விசாரணை நிலுவையில் இருக்கும் போதே, இப்படி பேசியிருப்பது, இந்த செயல் திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

ஆகையால், காவல்துறையினர் திருமதி. கனிமொழி அவர்களை இது குறித்து விசாரித்து உண்மையை அறிய வேண்டும். இந்த அநாகரீக செயலின் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

4 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

5 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

6 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

7 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

7 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

7 hours ago