மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. திமுகவினர் பணம் வந்தால் போதும் என இருக்கிறார்கள். முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. – பாஜக பிரமுகர் குஷ்பூ கட்டமான விமர்சனம்.
பால்விலை, மின்சார கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜகவினர் சென்னை அடையாற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ திமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், கடந்த ஆட்சியில் பால்விலை , மின்கட்டணம் உயர்ந்த போது, திமுக ஆட்சி சாலையில் இறங்கி போராடியது. பிறகு எப்படி இப்போது மட்டும் இதனை விலையேற்றுகிறார்கள். திராவிட மாடல் என கூறிக்கொண்டு மக்களை அவதிப்பட வைத்துள்ளார்கள்.
கோடை காலத்தில் தான் மழைநீர் வடிகால் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் அதனை விடுத்து மழைநேரத்தில் அந்த பணியை ஆரம்பித்து காலம் தாழ்த்தி பணியை பாதியில் நிறுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறது.
மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. திமுகவினர் பணம் வந்தால் போதும் என இருக்கிறார்கள். முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. பணம் வரவில்லை என்று மறுப்பு சொல்ல முடியாது. இதனால் என்மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக பிரமுகர் பெண்களை பற்றி அவதூறாக பேசும்போது திமுக அமைச்சர் மேடையில் சசிரித்து கொண்டிருந்தார் என பல்வேரு குற்றசாட்டுகளை முன்வைத்தார் பாஜக பிரமுகர் குஷ்பூ.
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…