ஒரு பேட்டியை கூட ஒழுங்காத பார்க்காத ஜெயக்குமார்.! பாஜக கரு.நாகராஜ் கடும் கடும் கண்டனம்.!

Published by
மணிகண்டன்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பாஜக பிரமுகர் கரு.நாகராஜ் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஊழல் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருந்தார். இந்த பேட்டியால் அதிமுக தரப்பில் மிகுந்த எதிர்ப்பை சந்தித்து வருகிறார் அண்ணாமலை. இந்த கருத்து குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் நேற்று பேசுகையில், அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். கூட்டணி தர்மத்தை மீறி பேசுகிறார். அவர் மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர். அண்ணாமலையின் பேச்சு அதிமுக – பாஜக கூட்டணி தொடரக்கூடாது என்பது போல் இருக்கிறது. அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது. பாரம்பரியம் தெரியாது. என காரசார விமர்சனங்களை அண்ணாமலை மீது ஜெயக்குமார் முன் வைத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழக பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் ஜெயக்குமாருக்கு தனது கண்டன அறிக்கையை பதிவிட்டு உள்ளார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேசுவதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் கிடையாது. எங்கள் தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். தமிழர்களின் நலனுக்காக மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் தமிழக அரசியலை சரி செய்ய வேண்டும் என உறுதியாக இருக்கிறார். பதவிக்கும் பரிசுக்கும் ஆசைப்பட்டு அவர் அரசியலுக்கு வரவில்லை. மக்கள் நலம் பெற வேண்டும் என கனவுகளோடு அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகள் தான் தங்களை நேர்வழிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இது போன்ற பேட்டிகளால் பாதிப்பு அதிமுகவுக்கு தான். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்து தான் செயல்பட வேண்டும். இதில் யாருக்கும் பெரியண்ணன் வேலை கிடையாது என கரு நாகராஜன் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இந்திய U19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்.!இந்திய U19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்.!

இந்திய U19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்.!

சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…

1 hour ago
”வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”- வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!”வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”- வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

”வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”- வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…

1 hour ago
”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!

”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!

ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…

2 hours ago

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., நாளை மறுநாள் இந்த 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.!

சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…

2 hours ago

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…

5 hours ago

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

9 hours ago