பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிப்பு!
இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிப்பு.
எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு:
இஸ்லாமியர்களை பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை பதிவு செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு கருத்துக்கள்:
பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந் கல்யாணராமன் மோதலை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது. இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி கல்யாணராமனை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பியதால் கல்யாணராமன் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.
சிறை தண்டனை விதிப்பு:
வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இடையே மோதலை தூண்டும் வகையில் 18 பதிவுகள் வெளியிட்டது விசாரணையில் தெரிவந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சைபர் கிரைம் போலீஸ் தொடர்ந்த வழக்கில் கல்யாணராமனுக்கு சிறை தண்டனை விதித்தது எழும்பூர் நீதிமன்றம். தண்டனை காலத்தை கல்யாணராமன் ஏற்கனவே,சிறையில் அனுபவித்து விட்டதால் விடுவிக்கப்படுறார் என கூறப்படுகிறது.