பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரங்கநாத் என்பவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளன. இதனிடையே, ரங்கானத்திற்கும், அருகேயுள்ள போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரங்கநாத் மகனின் பிறந்தநாளை அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஓட, ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் ரங்கநாத்தை தாக்கி கொடூர கொலை செய்தனர்.
இந்நிலையில், பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து போராட்ட இடத்துக்கு வந்த டி.எஸ்.பி அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இதனிடையே அந்த கிராமத்தை சேர்ந்த தமிழ் என்பாரின் மரக்கடை சூறையாடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார்கள் குவித்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…