பாஜக தலைவர் அண்ணாமலை முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.! வேல்முருகன் எம்எல்ஏ சரமாரி குற்றசாட்டு.!
உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றசாட்டு.
நேற்று சென்னை சைதாபேட்டையில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதிமுக தலைவர் வைகோ , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
சிலருக்கு வயிற்றெரிச்சல் : இதில் பேசிய வேல்முருகன் , பாஜக கட்சி மீதும், பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் கடுமையான குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், ஆளும் திமுக அரசு நாடு தழுவிய மதற்சார்பின்மை கூட்டணியை முன்னெடுத்துள்ளது சங்கிகளுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.
முகத்திரை : மேலும், உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என ஆவேசமாக பேசிய அவர், அடுத்ததாக , வடமாநிலத்தவர் பிரச்சனை சமயத்தில் பாஜக முக்கிய நிர்வாகி வேறு கட்சிக்கு சென்றது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அரசியல் நாகரீகம் : இது குறித்து பேசுகையில், பாஜக நிர்வாகி நிர்மல்குமாருக்கு, வதந்தி பரப்புவதற்கு அழுத்தம் தரப்பட்டு இருக்கும் அதன் காரணமாக தான் அவர் வேறு கட்சிக்கு சென்று இருப்பார் என குற்றம் சாட்டினார். அரசியலில் நாகரீகம் இருக்க வேண்டும் எனவும் தனது குற்றசாட்டை முன் வைத்தார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.