பாஜக தலைவர் அண்ணாமலை ஆயிரம் பேசுவார் – ஜெயக்குமார்
அண்ணாமலை தனது கட்சி வளர வேண்டும் என்பதற்காக தாங்கள் எதிர்க்கட்சி என கூறுகிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சாலை போடாமலே, சாலை போட்டவாறு புகைப்படம் வெளியிட்டு மோசடி செய்கின்றனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை ஆயிரம் பேசுவார். தனது கட்சி வளர வேண்டும் என்பதற்காக தாங்கள் எதிர்க்கட்சி என கூறுகிறார். எந்த கட்சியாக இருந்தாலும் அப்படி தான் சொல்வார்கள். ஆனால் எதிர்க்கட்சி யாரென்று மக்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.