#DMKFiles: இன்னும் சற்று நேரத்தில் ஊழல் பட்டியல்களை வெளியீடுகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.!
திமுக ஊழல் பட்டியல் இன்று வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், அதன் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
சென்னை: இன்று காலை 10:15 மணிக்கு DMKFiles என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிடுவேன் என அறிவித்துள்ளார். ஊழல் பட்டியலை வெளியிட பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை அறிவித்தது போல் இன்று ஆதாரப்பூர்வமாக பட்டியலை வெளியிட்டால், இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
ரபேல் வாட்ச் சர்ச்சை:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் தொடர்பான விவாதம் தமிழக அரசியலில் திமுக மற்றும் பாஜகவினரிடைய பெரும் பேசுபொருளாக மாறியது. ரபேல் வாட்ச் தொடர்பான பில் எங்கே என திமுகவினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
அண்ணாமலை அறிவிப்பு :
இந்நிலையில், இன்று ரபேல் வாட்ச் பில் உடன் சேர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தாரின் சொத்து மதிப்புகள், முதலீடு விவரங்கள், முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவரங்கள் ஆகியவை பட்டியல் போட்டு வெளியிடப்படும் என சில மாதங்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
DMK Files :
அதன்படி, அண்ணாமலை அறிவித்தது போலவே, இன்று வீடியோ வெளியாகும் என நேற்று அதற்கான முன்னோட்ட விடியோவை வெளியிட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் DMK Files (திமுக பட்டியல்) என தலைப்பிடப்பட்டு அந்த வீடியோ வெளியாகியுள்ளது.
தலைவர்களின் புகைப்படங்கள்:
அந்த வீடியோவில், மறைந்த முன்னாள் முதலவர் கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி எம்பி, எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.
DMK Files
April 14th, 2023 – 10:15 am pic.twitter.com/4Hlvq4l2G0
— K.Annamalai (@annamalai_k) April 13, 2023