ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சந்தி சிரிக்கும் அளவுக்கு இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடை தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் சரியாக ஆறு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறிவருகிறது. அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவு வேட்பாளரை ஆதரித்து தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
செங்கல் : நேற்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அதில், தர்மபுரியில் சிப்காட் அமைப்பதாக திமுக அரசு கூறியது. ஆனால் தற்போது வரை அது பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி செங்கலை காண்பித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சந்தி சிரிக்கிறது : அடுத்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. அதனை நானே கூறி இருக்கிறேன். இருந்தும், தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தை திமுக அரசு மற்றவர்கள் பார்த்து சந்தி சிரிக்கும் அளவுக்கு வைத்துள்ளது. என தனது விமர்சனத்தை முன் வைத்தார்.
பரிசு பொருட்கள் : மேலும், மக்களை கூட்டம் கூட்டமாக அடைத்து வைத்து ஆயிரம் ரூபாய் பரிசு தொகை, பட்டு சேலை, குக்கர், பரிசு பொருட்கள் என திமுக வழங்கி வருகிறது. எனவும் தனது குற்றச்சாட்டை செய்தியாளரிடம் முன்வைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…