அரியலூர் மாணவி தற்கொலை-10 லட்சம் நிதியுதவி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை..!

Published by
murugan

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்கொலை செய்து கொண்ட அரியலூர்  மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி 10 லட்சம் நிதி உதவி அளித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளி அருகே உள்ள விடுதியில் அவர் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19ஆம் தேதி உயிரிழந்தார்.

தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த அரியலூரை சார்ந்த பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம்தான் காரணம் என கூறப்படுகிறது.

ஆனால் இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி 10 லட்சம் நிதி உதவி அளித்து , மாணவியின் பெற்றோருக்கு அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும். பாஜகவின் போரட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. நீதி வேண்டும், நியாயம் வேண்டும். பாஜக எப்போதும் அரசியல் ஆதாயம் தேடாது என தெரிவித்தார்.

Recent Posts

“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…

“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…

சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…

32 minutes ago

சண்டே ஸ்பெஷல்..! மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வது எப்படி.?

சென்னை :மணப்பட்டி  சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…

44 minutes ago

புத்தக காட்சித் திருவிழா : “1,125 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு..” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …

52 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : பும்ரா விளையாடுவாரா? அகர்கர் சொன்ன தகவல்!

டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…

1 hour ago

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி  உள்ள நிலையில்,  வரும் 2026…

2 hours ago

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

2 hours ago