நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு- பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து..!

Annamalai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் இருந்து வருகிறார். இவர் “விஜய் மக்கள் இயக்கம்” மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ளத்தால் மூழ்கிய நிலையில்  விஜய் நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார். கடந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டினார்.

இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்குள் நுழையலாம் என்ற பேச்சுக்கள் எழுந்தன. இதற்கிடையில் இன்று தனது  அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.  நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக ஓட்டுகளில் கை வைக்க முடியாது – ஜெயக்குமார்

இந்நிலையில், தமிழக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் ” தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்