பசிப்பிணி போக்கிய மாமனிதர்.! விஜயகாந்த் மறைவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்ற விஜயகாந்திற்கு இறுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு இயற்கை எய்தினார்.
தற்போது, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், சக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
#RIPVIJAYAKANTH : தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.! அரசியல் தலைவர்கள் இரங்கல்.!
மேலும், அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது x பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தி குறிப்பில், தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர் ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்…!
பாசாங்கில்லாத மனிதர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ்… pic.twitter.com/uJHMNs2aWP
— K.Annamalai (@annamalai_k) December 28, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025