அராஜகத்திற்கு நாங்கள் ஒரு போதும் தலைவணங்க மாட்டோம் என்று கைது செய்யப்பட்ட நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்துகிறது.
சிதம்பரத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.திருமாவளவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது ஆனால் ஆர்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறிச் சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில்
விடுதலைச் சிறுத்தைகள் கோழைகள்.நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம் இது உங்களுடைய தோல்வி நாங்கள் தலைவணங்க மாட்டோம் பிரதமர் இந்த மண்ணில் உள்ள ஒவ்வொரு மகளின் மரியாதையை உறுதி செய்ய அடியெடுத்து வைக்கிறார்.
ஆனால் விசிக பெண்களை மதிப்பதையே அநியமாக கருதுகிறது. பெண்களின் மரியாதைக்காக கடைசி மூச்சு உள்ளவரை போராடுவோம் சிலரின் அராஜகங்கலுக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம்.
இந்த மண்ணின் ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த பாஜக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…