பெண்கள் அடுப்பங்கரைக்கும், பிள்ளைபெறவுமே லாயக்கு என நினைக்கும் பாஜக – ஜோதிமணி எம்.பி
பெண்களுக்கு அறிவு கிடையாது,அவர்கள் அடுப்பங்கரைக்கும்,பிள்ளைபெறவுமே லாயக்கு என நினைக்கும் பாஜக / ஆர் எஸ் எஸ் அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக மாற்றும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மோடி அரசு அனுப்பியுள்ளது. அதில் 31 எம் பிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஒருவர் மட்டுமே பெண்.
இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக மாற்றும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மோடி அரசு அனுப்பியுள்ளது. அதில் 31 எம் பிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே பெண்!
மோடி அவர்களே எதற்கு ஒரே ஒரு பெண் உறுப்புனர்?பேசாமல் அவரையும் நீக்கிவிட்டால், ஆண்களே பெண்கள் வாழ்வுபற்றி முடிவு செய்துவிடலாம்!பெண்களுக்கு அறிவு கிடையாது,அவர்கள் அடுப்பங்கரைக்கும்,பிள்ளைபெறவுமே லாயக்கு என நினைக்கும் பாஜக / ஆர் எஸ் எஸ் அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?’ என பதிவிட்டுள்ளார்.
மோடி அவர்களே எதற்கு ஒரே ஒரு பெண் உறுப்புனர்?பேசாமல் அவரையும் நீக்கிவிட்டால், ஆண்களே பெண்கள் வாழ்வுபற்றி முடிவு செய்துவிடலாம்!பெண்களுக்கு அறிவு கிடையாது,அவர்கள் அடுப்பங்கரைக்கும்,பிள்ளைபெறவுமே லாயக்கு என நினைக்கும் பாஜக / ஆர் எஸ் எஸ் அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?
— Jothimani (@jothims) January 3, 2022