பாஜக தமிழக மாணவர்களின் நலனை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் செயல்படுகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

பாஜக தமிழக மாணவர்களின் நலனை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் செயல்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி.
சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு பற்றிய ஆயிசுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், நீட் தேர்வினால் ஏழை எளிய மக்களுக்கான பாதிப்பு என்பது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. நீட் பயிற்சி மையங்கள் பெரிய அளவிலான கட்டண வசூல். இதனால் வசதியற்ற மாணவர்கள் அந்த பயிற்சி மையங்களுக்கு போக முடியாத சூழ்நிலையில் உள்ளார்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் மாணவர் சமுதாயத்தை காப்பதற்கும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் தான் மாண்புமிகு தமிழக முதல்வர் இந்த குழுவை அமைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், பாஜக தமிழக மாணவர்களின் நலனை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் செயல்படுகிறது. எனவே பாஜகவும் அதிமுகவும் நீட் தேர்வு சம்பந்தப்பட்ட அவர்களின் தெளிவான முடிவினை இன்றைக்கு அறிவிக்க வேண்டும் என்று உங்களின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025