பாஜக உருட்டி மிரட்டி அதிமுக கூட கூட்டணி வைத்திருக்கிறது! செல்வப்பெருந்தகை பேச்சு!
எந்த நேரத்தில் பாஜக கூட்டணியில் விரிசல் வரும் என சொல்ல முடியாது என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த செய்தி தான் ட்ரெண்டிங்கான விஷயமாக மாறியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அதிமுக – பாஜக கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் விரிசல் வரும் என பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” நான் ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கிறேன். அதிமுக – பாஜக கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி இல்லை. ஒரு கட்டாயத்தின் பெயரில் இந்த கூட்டணி அமைந்திருக்கிறது.
எந்த நேரத்தில் கூட்டணியில் விரிசல் வரும் எந்த நேரத்தில் தொண்டர்கள் புரட்சி செய்வார்கள் என்பதெல்லாம் சொல்லவே முடியாது. மற்றபடி இது விருப்பமான கூட்டணியாக இருந்தது என்றால் அன்றைக்கே எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசியிருக்கவேண்டும். அவர் தானே தலைவர் தலைவராக இருந்து கொண்டு பேசாமல் இருந்தது எதற்கு என இரண்டு விஷயங்கள் இருக்கிறது. ஒன்னு அவர் பேச மறுத்துவிட்டாரா அல்லது அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லையா?
அவர் எழுந்து சொல்லவேண்டும் அல்லவா இது உண்மையான கூட்டணி நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்று சொல்லவேண்டும். அவர் சொல்லாததை வைத்து பார்க்கும்போது எதோ கட்டாயத்தின் பெயரில் மிரட்டி உருட்டி சேர்த்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். இது என்னுடைய பார்வையில் பட்ட கருத்து . மக்களும் இதனை தான் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் அதிமுகவை சேர்ந்த சில தலைவர்கள் கூட இதனை எதிர்க்கிறார்கள்.
அதனைத்தொடர்ந்து நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் எங்களுடைய இஷ்டம் கூட்டணி பார்த்து பயமா என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கும் பதில் அளித்த செல்வப்பெருந்தகை ” அச்சம் என்பது யாருக்கு பாரதியார் என்ன சொல்லியிருக்கார்? அச்சம் என்பது மனிதர்களுக்கே கிடையாது தலைவர்களுக்கு எப்படி இருக்கும்? ” எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025