பாஜக இந்தியாவுக்கான அரசா? இந்தி பேசும் மாநிலங்களுக்கான அரசா? – முக ஸ்டாலின் கேள்வி.!

Default Image

மத்திய பாஜக அரசு ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மத்திய அரசா? இந்தி பேசும் மாநிலங்களுக்கு மத்திய அரசா? என்று  திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் என்பவர் இன்று குற்றசாட்டு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறது. இந்த ஆணையர் அலுவலகத்தில் உள்ள மூன்றில் 2 பேர் ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் என்றும் அவர்களை ஹிந்தி பிரிவில் பணியமர்த்தாமல் தமிழர்களை ஹிந்தி பிரிவில் பணி அமர்த்தியுள்ளது சரியான செயலாகாது.

இந்தி தெரியாத ஹிந்தி பிரிவில் வேலை செய்வதற்கு விருப்பமில்லாத என்னிடத்தில் அந்த பணியை கொடுப்பது என்பது என் மீது ஹிந்தி மொழியை திணிப்பதாக நான் கருதுகிறேன். அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால், புரியாமல் கையெழுத்திடும் நிலை உள்ளது. எனவே, இந்தி பிரிவிற்கு இந்தி எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடும்படி மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் தலைவர் அவர்களை தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், இந்தி தெரியாத தனக்கு இந்திப் பிரிவில் பொறுப்பு வழங்கியது குறித்த GST உதவி ஆணையர் பாலமுருகனின் குற்றச்சாட்டு நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் பாஜக அரசின் நோக்கத்தை வெளிச்சமிடுகிறது. பாஜக அரசு இந்தியாவுக்கான அரசா? இந்தி பேசும் மாநிலங்களுக்கான அரசா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்