டெல்லிக்கே ராஜாவாக இருந்தாலும் பாஜக தமிழகத்தில் இன்னும் வளராத கட்சி என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.
இதனிடையே பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் தான் தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். பாஜகவை பொருத்தவரை தமிழகத்தில் ஆட்சி அமைவதில் ஒரு தவிர்க்க முடியாத கட்சியாக உள்ளது. எந்த கூட்டணி அமைத்தாலும் சரி ,தமிழகத்தில் பாஜக இல்லாமல் அடுத்த சட்டசபை தேர்தலில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறினார்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பினார்கள் செய்தியாளர்கள்,இதற்கு பதில் அளித்த அமைச்சர், கட்சி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக ராஜா அப்படி கூறுகின்றார்.டெல்லிக்கே பாஜக ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் ஏதேனும் ஒரு திராவிட கட்சியில் தான் சவாரி செய்ய வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை பாஜக இன்னும் வளர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…