நாங்குனேரியில் நடைபெற்ற கோரசம்பவத்தில் தாக்கப்பட்ட சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திரா தேவி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கல் இருவரையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இருவரும் நலமுடன் உள்ளனர். கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாயின் அரவணைப்பில் இரு குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர். முதல்வர் அவர்கள் இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவர்களுக்கு ஒரு வீட்டை ஆயத்தப்படுத்தி கொடுக்க வேண்டும். இருவரையும் பாதுகாப்பான முறையில் பயில வைக்க வேண்டும்.
சாதிப்பிரச்சனைகளை தடுக்க தனி உணவு பிரிவு தொடங்க வேண்டும். சாதியின் பெயரால் நெல்லை தூத்துக்குடி வட்டாரங்களில் இந்த கொடுமை தொடர்ந்து நடக்கிறது. மாணவனுக்கு அரசு சிறப்பான மருத்துவ உதவிகளை செய்து வருகிறது.
I.N.D.I.A கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுகிறது. இக்கூட்டணி உருவானது முதல், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தமிழ்நாட்டில் எடுபடாது, எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…