அதிமுக பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம்..! டிடிவி தினகரன் விமர்சனம்.!
ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம் என்று டிடிவி தினகரன் பேட்டி.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், இரட்டை இலையும், அதிமுகவும் இபிஎஸ் இடம் இருப்பதால் பலவீனமாகி கொண்டு இருக்கிறது. துரோகத்தின் மூலம் பதவியை பிடித்துள்ள இபிஎஸ் தரப்பினர் அதற்கான பதிலை எதிர்காலத்தில் கண்டிப்பாக சொல்ல வேண்டும்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம் என்றும் பாஜக நினைத்தால்தான், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மீண்டும் இணைய முடியும் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
மேலும், அதிமுக பழனிச்சாமி என்கிற சுயநல மனிதரிடம் சிக்கித் தவிக்கிறது என்றும் இயக்கமும் சின்னமும் இருப்பதால் அவரிடம் கட்டுப்பட்டிருப்பவர்கள் வருங்காலத்தில் வெளியேறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.