அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார்-தமிழக பாஜக தலைவர் தமிழிசை

அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.
பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.
அதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள்,மதிமுக என கட்சிகள் உள்ளது.
இந்நிலையில் கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார்.கூட்டணி அமைவது தேவையானது; காலத்தின் கட்டாயம்;.வாக்குகள் சிதறாமல் பெற கூட்டணி தேவை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024