ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே கொடி, ஒரே கொள்கை, ஒரே கலாசாரம் என்ற பாதையில் பாஜக செல்கிறது-கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என நாங்கள் பலமுறை தெரிவித்த பின்னரும், காங்கிரஸ்தான் நீட் தேர்வை கொண்டு வந்தது என அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதை ஏற்றுக் கொள்ளவிலை என்பதை காட்டுகிறது. ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரே மேடையில் தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று கூறினார்கள்.
ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே கொடி, ஒரே கொள்கை, ஒரே கலாசாரம் என்ற பாதையில் பாஜக செல்கிறது. மத்தியிலும் மாநிலங்களிலும் பாஜக மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என மோடி அரசு செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025