பாஜக என்பது கட்சி அல்ல, அது ஒரு சூழ்ச்சி எனவும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என சசிகாந்த் செந்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 31 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துக்கொண்டே வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு 5-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த வேளாண் சட்டங்களை திரும்பி பெற எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜக என்பது கட்சி அல்ல, அது ஒரு சூழ்ச்சி என தெரிவித்த அவர், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என கூறினார். மேலும், விவசாயிகளின் போராட்டம், மக்களின் போராட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…