பாஜக ஜனநாயகத்தை புதைத்து வருகிறது – வேல்முருகன்
தனக்கு இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி, ஆட்சி கவிழ்ப்புகளில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையை தான் செய்து வருகிறார்கள்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளர். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா பொறுப்பேற்ற பின், குறுக்கு வழியில், சட்டத்திற்கு புறம்பாக பணம், பதவிகளை கொடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிகளை கவிழ்த்து வருகிறது.
தனக்கு இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி, ஆட்சி கவிழ்ப்புகளில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையை தான் செய்து வருகிறார்கள். இது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல. இது நாளை நரேந்திர மோடி அவர்கள், சர்வாதிகாரியாக நாட்டை ஆட்சி செய்ய வழிவகை காணும், அதற்கான முன்னேற்பாடுகள் தான் என குற்றம் சாட்டியுள்ளார்.