பாஜக தான் ராகுல்காந்தி அறிவிப்பு கண்டு அச்சம் கொண்டுள்ளது – திருமாவளவன்
பாஜக தான் ராகுல்காந்தி அறிவிப்பு கண்டு அச்சம் கொண்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,மத்திய பட்ஜெட் கவர்ச்சிகரமான அறிவிப்புகளாகதான் இருக்கிறதே தவிர பயன் தரும் அறிவிப்புகள் இல்லை. உண்மையாக பார்த்தோமானால் பாஜக தான் ராகுல்காந்தி அறிவிப்பு கண்டு அச்சம் கொண்டுள்ளது.
ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்ததால் பாஜகதான் அச்சத்தில் உள்ளது.நிலமற்ற ஏழை கூலி தொழிலாளிகளை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை .மத்திய அரசின் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளுக்கு மக்கள் மயங்கமாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.