விமர்சனத்தை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சி பாஜக – ப.சிதம்பரம்
விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி என்றால் அது பாஜக தான் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், மத்திய அரசை விமர்சனம் செய்தால் உடனே காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். விமர்சனத்தை கூட சகித்துக்கொள்ள முடியாத அரசை நான் இப்போதுதான் பார்க்கிறேன். விமர்சனத்தை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியாக பாஜக உள்ளது.
பிரதமரை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில், இந்திய அரசை குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை சிலர் பரப்புகிறார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதாவது, ராகுல்காந்தி வெளிநாட்டில் இந்தியாவை தரக்குறைவாக பேசியதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியிருக்கிறார். வெளிநாடு சென்றால் மௌனமாக இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி என்றால் அது பாஜக தான் என அமைச்சர் ஜெய்சங்கர் கருத்துக்கு ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.