பாஜக ஒரு சர்வாதிகார சக்தி ;நாங்கள் அதை தகர்த்து எறிவோம் – கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் காண கூட்டம் நடைபெற்றது இதில் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டனர்.
பாஜக சர்வாதிகார சக்தி:
இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவரிடம் செய்தியாளர்கள் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி இது பாஜகவின் சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது.அவைகளை நாங்கள் தகர்த்து எறிவோம் நாங்கள் எந்தவிதமான விதி மீறல்களில் ஈடுபடவில்லை என்றார்.
ராகுல்காந்தியால் தென்மாவட்டங்களில் எழுச்சி :
நீங்கள் அந்த மாணவர்களிடம் பேட்டி எடுத்து பாருங்கள் எவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.ராகுல்காந்தி வருகையினால் தென்மாவட்டங்கள் எழுச்சி அடைந்து உள்ளன.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது.
இளைஞர்களுக்கு நம்பிக்கை தருவது தான் ஒரு தலைமையின் பண்பு.அந்த பண்பை ராகுல்காந்தி செய்திருக்கிறார்,எனவே பாஜகவின் செயல்பாடு அங்கு ஏதும் எடுபடாது என்று கூறினார்.
மூன்றாவது அணி:
காங்கிரஸ் மூன்றாவது அணியில் சேர விருப்பப்படுவதாக ஒரு உறுதியற்ற செய்தி பரவியது.இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி நாங்கள் யாருடனும் பேசவில்லை வதந்திகளை பரப்ப வேண்டாம் எங்களுக்கு மூன்றாவது அணியின் மீது நம்பிக்கை கிடையாது என்று கூறினார்.