அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு…? விளக்கமளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…!
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு என்பதில் உண்மையில்லை.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கூட்டணியில் இருப்பதால் ஓபிஎஸ் – ஈபிஎஸ் பிரதமரை சந்தித்துள்ளனர். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு என்பதில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கூறுகையில், இது தொடர்பாக நீதிமன்றம் நடுநிலையாக தீர்ப்பளிக்கும். அரசியல் காழ்புணர்ச்சியால் சோதனை செய்திருந்தால், அந்த வழக்கு நிற்காது என தெரிவித்துள்ளார்.