பாஜகவிடம் பணமே இல்லை…! அப்புறம் எப்படி கறுப்புப்பணம் இருக்கும்…? – சி.டி.ரவி

கறுப்பு பணம் இல்லையென்றால் ஏன் கவலைப்படவேண்டும். வருமான வரித்துறைக்கு அதிமுக, திமுக , காங்கிரஸ், பாஜக என்ற பாகுபாடு கிடையாது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கறுப்பு பணம் இருப்பது குறித்து கிடைக்கும் தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.
மேலும், கறுப்பு பணம் இல்லையென்றால் ஏன் கவலைப்படவேண்டும். வருமான வரித்துறைக்கு அதிமுக, திமுக , காங்கிரஸ், பாஜக என்ற பாகுபாடு கிடையாது. பாஜக-விடம் பணமே இல்லை. அப்புறம் எப்படி கறுப்பு பணம் இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில், பல இடங்களில், அரசியல் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.