தமிழகத்தில் பாஜக வளர வாய்ப்பே இல்லை – கே.வி.தங்கபாலு
தமிழ்நாட்டில் பாஜக வளர வாய்ப்பே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு விமர்சனம்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு, தமிழகத்தில் பாஜக வளர வாய்ப்பே இல்லை. பாஜக வளரும் என்பது பகல் கனவு, அது ஒருபோதும் நடக்காது என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றசாட்டினார். கடந்த 8 ஆண்டுகளில் பாதமர் மோடி கூறிய வாக்குறுதிகளில் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை என்றும் பல கோளாறுகளை வைத்துள்ள பாஜக தமிழ்நாட்டில் எப்படி வளரும் எனவும் கேள்வி எழுப்பினார்.