பாஜகவில் இணைந்த பிரபல ரவுடிக்கு புதிய பொறுப்பு வழங்கிய பாஜக..!
பிரபல ரவுடி படப்பை குணா காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், போலீசார் இவர் மெது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, இவர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகள் இருக்கிறது. இதற்கிடையில் படப்பை குணாவின் மனைவியான எல்லம்மாள், பாஜகவில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.
இந்த நிலையில், பாஜகவில் கடந்த ஆண்டு இணைந்தார். இவர் கடந்த சில மாதங்களாகவே பாஜகவில், கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரபல ரவுடி படப்பை குணா, காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குணா மீது 48 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.